(1) தூய்மை
இந்தியா
புற்று
நோயாளிகள் காப்பகத்தில்
நோயாளிகளின்
உடல் துடைத்து விட்ட
செவிலித்
தாயின் உடையில் இருந்த
பிளாஸ்டிக்
வில்லையில்
“கங்கா”
என்று பெயர் பொறித்திருந்தது.
(2) பாசம்
“ முருகா, இந்தா கொழுக்கட்டை
எடுத்துக்கோ
வேண்டிய அளவு சாப்பிடு”
என்ற
வினாயகர் கையில் வைத்திருந்த
பாத்திரத்தில்
நூற்றுக் கணக்கில் கொழுக்கட்டைகள்.
(3) உலகமயமாதல்
ஆதாமிடம்
ஆசை வார்த்தைகள் கூறிய
சாத்தான்
காட்டிய மாதிரி ஆப்பிளில்
“IMPORTED
FROM CHINA”
என்று
வில்லை ஒட்டியிருந்தது.
(4) தொழில் நுட்பம்
காவலர்கள் கையில்
போல்ட் மற்றும் நட்டுகளும்,
ஸ்பானரும், நட்சத்திர திருப்புளியும்
இருந்தது.
(5)
ஆதார்
சித்திரகுப்தன் டிஜிட்டல் காமிராவில்
புதிதாக வந்த உயிர்களின்
படத்தைப் பதிவு செய்து
அடையாள அட்டை வழங்குவதற்குக்
கோரப்பட்ட உலகளாவிய டெண்டரின்
நகலை அவர் அலுவலகத்தின்
அறிவிப்புப் பலகையில் ஒட்டியிருந்தார்.
No comments:
Post a Comment