மரண
தண்டனை உங்களுக்கு
இல்லை
இல்லை
சட்டம் ஒரு ஜல்லிக்கரண்டி
எண்ணெய் வடிப்பது போல
எளிதாக உங்களுக்கு
வழி தரும்.
உங்கள்
உடற்பசிக்கு, காமத்திற்கு
மிருக வெறிக்கு
மிருக வெறிக்கு
பலியான எங்களுக்கு என்றுமே
நீதி வாய்க்கவில்லை
வெறியோடு கொன்றவனுக்கு
ஆதரவுக் கரமளித்து மனிதம் பேசுவீர்
யாரேனும் எதிர்த்து சுட்டினால்
அவனைக் கொன்றால் போன உயிர் திரும்பி வருமா
என்று
வேதாந்தம் பேசுவீர்
உயிரோடு எரித்தாலும், அரிவாளால் வெட்டினாலும், கற்பழித்துக் கொடுரமாகக் கொன்றாலும்
அதிலும் சாதியும், அரசியலையும்
புகுத்தி நீர்க்க வைப்பீர்.
புகுத்தி நீர்க்க வைப்பீர்.
இனிமேல் பிறந்தவுடன் வழக்கம் போல் கள்ளிப் பால்
பருகத்
தந்து உயிர் துறக்க ஏற்பாடு செய்யுங்கள்
அழுகிப் போன மன நோய் மனிதர் களுடன் வாழ்வை விட அதுவே மேல்.
No comments:
Post a Comment