1) தேர்தலில வெற்றி பெற்ற நம்ம அண்ணன் தொகுதியில் எல்லாத்
தெருவுக்கும் நன்றி சொல்லப் போனாரு. ஆனா அவரு படிச்ச பள்ளிக்கூடம் இருக்கிற தெருவுக்கு வர பயப்படறாரே.
ஏனுங்க?
அது படிக்கச்சோல்ல அந்த பள்ளிக்கூட வாசலில கடை
போட்டிருக்கிற ஆயாகிட்ட வாங்கித் தின்னதுக்கு இன்னும் காசு தரலையாம்.
2) ஆனாலும் அநியாயத்துக்கு ரொம்ப அப்புராணிங்க நம்ப புது
வட்டச் செயலர்.
அப்படியா. பார்த்தா தெரியலையே.
நேத்து மக்களை சந்திக்க வட சென்னை போகலாம் ன்னா மசால் வட சென்னையை
காலைல முதலில் பார்த்திடலாம். அப்புறமா மெதுவட சென்னையை மாலைல பார்க்கலாம் என்கிறாரே.
3)
மாப்பிள்ளை எங்கே வேலை செய்யறார் தரகரே?
ஓடற மோட்டார் சைக்கிளை மிதிக்கிற வேலை.
ஓ. போக்குவரத்துக் காவலா. சரி சரி.
4) ரமேஷ் : நம்ம குப்புசாமி பெரிய பேச்சாளர் ஆகிட்டான்.
மேடையில
சும்மா பொங்கிப் பொங்கி
உணர்ச்சி கொப்பளிக்க பேசறான்டா.
மகேஷ் : அப்ப நம்ம குப்புசாமி, குபுக்சாமி
ஆகிட்டான்னு சொல்லு.
5) முன்னாள் மாணவன்: ஐயா,
என்னை நினைவிருக்கிருதா?
தமிழாசிரியர்: நீ...... முருகேசன் தானே.
நல்லா ஞாபகம்
இருக்கு. படிக்கிற காலத்தில் நெடு நல் வாடை என்பதை எப்போதும் நெடு நாள் வடை என்று படிப்பாயே. ஆமாம். இப்போ என்ன செய்கிறாய்?
முன்னாள் மாணவன்: துரித உணவு விடுதி நடத்துகிறேன் ஐயா.
6) தொலைக்காட்சியில் உடல் நிறை குறைப்பு பற்றிய நிகழ்ச்சி
ஒன்று செய்து கொண்டு இருந்தீங்களே. அது பெயர் என்ன?
ஒல்லிமயமான எதிர்காலம் சார்.
7)
அந்த குடும்பத்தில் அண்ணனும் தம்பியும் எப்பவுமே தொழிலில்
எதிரும் புதிருமாகத் தான் இருப்பாங்க.
அப்படியா. என்ன தொழில் பண்ணறாங்க?
அண்ணன் ஆடிட்டர். அவரு கறுப்பை வெள்ளையாக்குவாரு.
தம்பி அழகு
நிலையம் நடத்தறாரு. இவரு வெள்ளையை கறுப்பாக்கிடுவாரு.
8) உங்க இரண்டு பேரையும் தீவிரவாதி என்று பிடிச்சிட்டு
வந்திருக்காங்க. உங்கள் தரப்பில் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்.
எசமான், கும்பிடறேனுங்க.
நா மாவாட்டிக்கிட்டு இருந்தேன். என்னய மாவோயிஸ்ட் ன்னும் வடை சுட்டுட்டிருந்த என் பொஞ்சாதிய துப்பாக்கி சுட்டதா தவறா யாரோ தகவல் தந்ததில பிடிச்சிட்டு வந்துட்டாங்க.
நா மாவாட்டிக்கிட்டு இருந்தேன். என்னய மாவோயிஸ்ட் ன்னும் வடை சுட்டுட்டிருந்த என் பொஞ்சாதிய துப்பாக்கி சுட்டதா தவறா யாரோ தகவல் தந்ததில பிடிச்சிட்டு வந்துட்டாங்க.
9) என்னப்பா புதுமாப்ள,
தேனிலவு முடிந்து முதநாள் ஆபீஸ் வரும் போதே தலை எல்லாம்
ரத்தக் காயமா இருக்கு?
தனிக்குடித்தனம் போக வேண்டும் ன்னு தேனிலவு போன இடத்தில
தினம் தினம் பொண்டாட்டி தலையை கல்லில அடிச்சித் துவைச்சி மூளைச் சலவை செய்தாப்ல.
10) ரௌடி #### யோட தலைவர் இருக்கிற படத்தை வெளியிட்ட எல்லாப் பத்திரிகை
ஆசிரியர்களையும் விட்டுட்டு அந்த ****** பத்திரிகை ஆசிரியரை மட்டும் ஏன் கைது பண்ணிணாங்க.
அது ஒன்றுமில்லை. படத்துக்கு கீழே இடது புறம் இருப்பவர் ரௌடி #### என்று
போட்டிருந்தாராம்.
11) நான் இறந்து போனால் என் கல்லறை மீது மல்லிகை மலர்சரங்களை
இடுங்கள் என்கிறாரே தலைவர். என்ன விஷயம்?
கேட்டேன். அது அங்க உலாவற மோகினிப் பிசாசுங்களுக்கு பரிசளிக்க ன்னு சொன்னாரு.
12) ஊழலில் திளைத்து பெருத்த தலைவர் இப்ப எப்படி இருக்காரு?
புழலில் உழைத்து மெலிந்து போயி கெடக்காரு.
13 புது ஆவி: கந்து வட்டி தகராறில வெட்டிக் கொலையான நம்ம தலைவர் இப்போ இங்கே என்ன செய்யறாரு?
பழைய ஆவி: அங்க மாதிரித்தான் இங்கேயும் பணப் பேயா அலையறாரு.
14) அண்ணே பயங்கரவாதத்தை ஒழிக்க என்ன நடவடிக்கை எடுத்தீங்க ன்னு
சட்டமன்றத்தில் கேள்வி கேட்டவங்களை உங்க பதிலால நொந்து நூடுல்ஸ் ஆக்கிட்டிங்களாமே. அப்படி என்னண்ணே பதில் சொன்னீங்க?
போலியோ சொட்டு மருந்து உள்ளிட்ட எல்லா மருந்துகளையும்
மக்களுக்கு இலவசமாக வழங்கி தீவிர வாதம் படிப்படியாக ஒழிக்கப்படும் என்று
உறுதியளித்தேன். அவ்வளவுதான் டா.
15) சித்ர குப்தன்: நரகத்திற்குப் போகும் சாலையில் பயங்கர போக்குவரத்து நெரிசல் என்று புகார்
பிரபோ.
எமதர்மன்: யாரோ VIP வருகைக்காக போக்குவரத்தை நரக காவல் நிறுத்தி இருக்காங்களாம்.
எமதர்மன்: யாரோ VIP வருகைக்காக போக்குவரத்தை நரக காவல் நிறுத்தி இருக்காங்களாம்.
16) அண்ணன் ஏகப்பட்ட டிராவல் பேக்,
சூட்கேஸ் என்று வாங்கிக் குவிக்கிறாரே என்ன விஷயம்?
ஒண்ணுமே புரியலடா?
உஷ். அண்ணன் மாபெரும் அரசியல் பயணத்திற்கு தயாராகிறார் டா.
17) காலை பொதுக்குழுக் கூட்டத்தில கலந்துகொண்ட தலைவர் மதியம்
என்ன புதுசா செம்பட்டை நிறத்தில தலைக்கு கலர் பண்ணிக்கிட்டு வந்திருக்கிறாரு?
தொண்டருங்க 'தலைமை' மாற்றத்தை பரவலா விரும்புறாங்கன்னு அவர் காதுக்கு செய்தி
வந்திச்சாம். அதாலதான் போலிருக்கு.
18) டார்லிங், நீ கேட்டபடியே " ஆச்சி" மசாலா வாங்கிட்டு வந்திட்டேன்பா.
அப்ப நாளையிலிருந்து உங்களையே துணியும் துவைக்க வைக்க "இனி ஒரு விதி செய்வோம்" டா. உங்கள் ஆரோக்கியம் என் இலட்சியம் இல்லையா டியர்?
அப்ப நாளையிலிருந்து உங்களையே துணியும் துவைக்க வைக்க "இனி ஒரு விதி செய்வோம்" டா. உங்கள் ஆரோக்கியம் என் இலட்சியம் இல்லையா டியர்?
19) வெள்ளயா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்கிற
மாதிரியானதுதான்
கோட் போட்டவன் ஆட்டைய போட மாட்டான் என்று நினைக்கிறதும்.
20) டேய் , அந்த பஸ்ஸிலேயே டிக்கெட் எடுத்துப் போடுடா. அதிலதான் ஃப்ரியாட்டு வைப் எல்லாம் தராங்களாம்.
அது ஃபரீ வைப் இல்லண்ணே.
ஃப்ரீ வைபை இன்டெர்நெட் கனைக்சன்ணே.
ஃப்ரீ வைபை இன்டெர்நெட் கனைக்சன்ணே.
21) அண்ணன் இருக்காருங்களா?
அப்ளிகேஷன் இன்ஸ்டால் பண்றதில பிசியா இருக்காரு..
அண்ணணா கம்பியூட்ரில .... ஆச்சரியமா இருக்கே? உண்மையாவா?
அட நீ வேற "செட்அப்" பை புதுசா கட்டின வூட்டில "இன்ஸ்டால்" பண்ண அலைஞ்சிட்டிருக்காரு , அத்த சொன்னேன்.
அண்ணணா கம்பியூட்ரில .... ஆச்சரியமா இருக்கே? உண்மையாவா?
அட நீ வேற "செட்அப்" பை புதுசா கட்டின வூட்டில "இன்ஸ்டால்" பண்ண அலைஞ்சிட்டிருக்காரு , அத்த சொன்னேன்.
22) அண்ணன் சின்ன வயசிலிருந்தே மகாகவி பாரதியின்
வார்த்தைகளுக்கு மதிப்பளிப்பார் தெரியுமா?
ஓ. அப்படியா
ஆமாம். "படித்தவன் சூதும் வாதும் செய்தால் அம்போ ன்னு போவான்"
என்பதால்
பள்ளிக்கூடம் போய் படிக்கக் கூடாதுன்னு முடிவெடுத்து மறுத்துட்டாரே.
23) ஏண்டி உன் பாய் ஃபிரண்ட்டை காதலர் தினமும் அதுவுமா கழற்றி
விட்டே?
அவன் சிவப்பு ரோஜா வாங்கித் தராம மல்லிகைப் பூவால தலையில "மலர் வளையம்"
வைச்ச போதே
உஷாராயிட்டேன்
.
.
24) ஹலோ, ராமு இருக்கிறரா?
நீங்க யார் பேசறது?
நான் ஆவடி முருகேசன்னு சொல்லுங்க.
அப்படியா. இப்ப அவர் பார் கவுன்சில்
மீட்டிங் போயிருக்காரு. வந்ததும் படுத்துடுவாரு. காலையில சொல்லிடறேன்.
அட . எப்ப பி.எல் படிச்சாரு? தெரியவே
தெரியாதே.
இல்லீங்க. டாஸ்மாக்கில
தண்ணிய போட்டுட்டு பாரில நாலு வெட்டிப் பசங்களோட அரட்டை அடிச்சிட்டு வருவாரு. அதைத்தான்
நாகரீமா சொன்னேன்.
No comments:
Post a Comment