Tuesday, 25 October 2016

மன்னாதி மன்னன் ஜோக்ஸ் - (10)

(91) "போர்க்களம் புக உள்ள நம் வீரர்களுக்கு நம்பிக்கையூட்டும் நிகழ்ச்சி நடத்த வேண்டாமா, அமைச்சரே"?

"நாம் வருடந்தோறும் தவறாமல் 'பம்மிக் காட்டுவோம்' தன்னம்பிக்கை நிகழ்ச்சிகளை ஊர்ஊராய் முகாமிட்டு நடத்துகிறோமே, மன்னர்மன்னா"(92) "நதி நீர் பிரச்சனை தொடர்பாக பஞ்சாயத்து செய்ய நடுவராக உங்களை சக்கரவர்த்தி நியமித்ததை ஏன் மறுத்து விட்டீர்கள் மன்னா"?


"அரண்மனையின் பாரம்பரிய பித்தளைச் சொம்பை அடுத்து வர அனுமதிக்கவில்லையே. அதற்கு எதிர்ப்பைக் காட்ட வேண்டாமா, (93) அமைச்சரே"."நேற்று ரயில் மறியல் போராட்டம் மிகவும் தீவிரமாக இருந்தது. இன்று மறியல் செய்ய ஒருவரைக் கூட காணவில்லையே என்ன காரணம் அமைச்சரே?

"பிரேக் பிடிக்கவில்லை"!
ஆய்வில் பகீர்!!

நாட்டில் ஓடும் தொண்ணூறு விழுக்காடு ரயில் வண்டிகளில்!!!

என்று 'தினப்பூ' நாளிதழிலில் இன்று தலைப்புச் செய்தி வந்திருந்ததே அரசே".


(94) "யாரங்கே, எல்லா அமைச்சர்களையும் வரச் சொல்லுங்கள். அவர்களைக் குளிப்பாட்டி, புத்தாடை அணிவித்து மஞ்சள், குங்குமம் இட்டு வரிசையில் உட்கார வைத்து பூசணிக்காய் சுற்றுங்கள்".

"உத்தரவு மன்னா. காரணம் கேட்டால் என்ன சொல்ல அரசே"

"அரசு இயந்திரங்களுக்கு ஆயுத பூசை செய்ய மன்னர் உத்தரவு என்று சொல்லுங்கள்".


(95) "மன்னா மரண தண்டனை வழங்கும் அளவிற்கு நான் என்ன தவறு இழைத்தேன்"?

"அப்படி தண்டனை நான் தரவில்லையே அமைச்சரே? என்னவாயிற்று?

"பன் தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சியில் இன்று அரசியார் செய்து காட்டப் போகும் தீபாவளி சிறப்புப் பலகாரங்களை நான் ருசி பார்க்க வர வேண்டும் என்று ஆணையிட்டுள்ளாரே, தெரியாதா மன்னா"?
(96) “ டெபிட் மற்றும் 'ருபே' கார்ட்களின் ரகசியக் குறியீடு எண்களைத் திருடி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நடந்து விட்டது மன்னா".
"அப்படியா உடனே அதன் பெயரை 'பெப்பே' கார்ட் என்று மாற்றி விடுங்கள் அமைச்சரே.

(97) "அமைச்சரே இந்த அரசு அதிகாரிகள் படு மோசம். நான் கூட மேயரை சரியாக பதில் சொல்லாதவர் என தவறாக நினைத்தேன்"
.
"அப்படியா மன்னா"?

"ஆம். இன்றைய நாளிதழ்களில் பாருங்கள்.
'அதிகாரிகளிடம் விடை பெற்றார் மேயர்' என்று செய்தி வந்துள்ளதே".

(98) "சக்கரவர்த்தி அண்டை நாட்டுடனான நட்புப் பாலத்திற்கு கை கொடுத்தார் என்று சொன்னீர்களே அரசே, எப்படி"?
"அண்டை நாட்டு மன்னன் 'பிரிட்ஜ்' ஆட கூப்பிட்டார்.ஒரு கை குறைந்தது. அப்போது சக்கரவர்த்தியும் ஆட்டத்தில் சேர்ந்து கொண்டார் அமைச்சரே".

(99) "இளவரசர் இரண்டு நாளாக ஏதோ ஜி யிடம் ஃபோன் பேச வேண்டும் என்று கேட்டு ஒரே நச்சரிப்பு. உடனே எண் வாங்கித் தர ஏற்பாடு செய்யுங்கள் அமைச்சரே".

"விசாரித்தேன் அரசே, அது பக்கத்து நாட்டு இளவரசி விஜி யிடம் ஃபோன் பேச வேண்டும் என்று இளவரசர் சொன்னார்கள்”


(100) "அந்த படைத்தளபதியை ஏன் மன்னா பதவி நீக்கம் செய்யச் சொல்கிறீர்கள்"?

"சீன வீரர்களுடன் நம் வீரர்கள் ஒரு வாரம் கூட்டுப் பயிற்சி செய்ய தினசரி ஐந்து லட்ச ரூபாய்க்கு சைனீஸ் வெஜிடபிள் கூட்டு செய்ய காய் வாங்கியதாக பில் வைத்திருக்கிறார் அமைச்சரே ”.


2 comments: