Saturday, 22 October 2016

மன்னாதி மன்னன் ஜோக்ஸ் - (8)

(71) "என்ன அமைச்சரே, இளவரசர் என் அறுபதாம் வயது பூர்த்தியை முப்பெரும் விழாவாக எடுக்கப் போகிறாராமே, மற்ற இரு விழாக்கள் எதற்கு"?

இரண்டாவது விழா உங்கள் பணி நிறைவு பாராட்டு விழா மற்றும் மூன்றாவது ஓய்வு கால முதியோர் இல்லத்தில் தங்களின் புதுமனை புகு விழா, மன்னர்மன்னா”
 (72) "அமைச்சரே, கட்டியக்காரன் நாளை முதல் கட்டியம் கூறும் போது ராஜ கம்பீர, ராஜ குல திலக ஜிஜிஜிஜி சோறுகேசி மன்னர் வருகிறார் என்று கட்டியம் சொல்ல உத்தரவிடுகிறேன்"?

ஏன் மன்னா , எதற்கு இந்த திடீர் மாற்றம்?

"கட்டியம் சொல்லப்படுவது 4G ஆக இருக்க வேண்டாமா மங்குணி அமைச்சரே".


(73) "அரசே, நாங்கள் சொல்பவர்களைத்தான் அரசு உணவகங்களில் பணி அமர்த்த வேண்டும் என்று குறுநில மன்னர்களும், பாளையக்கார்களும் பிரச்சனை செய்வதாகத் தகவல் வந்துள்ளது"."அப்படியா அமைச்சரே, இனி அவர்களே வேலை வாய்ப்பு அலுவலகங்கள், அரசு பணியாளர் தேர்வாணையம் போன்ற அமைப்புகள் நடத்த சட்டபூர்வமாக அனுமதி தந்து விடலாம்".
(74) "இந்த அரசு சிவப்பு நாடாவில் சிக்கித் தவிக்கிறது என்கிறார்களே, அமைச்சரே. இந்தக் களங்கத்தை எப்படித் துடைப்பது"?


"இனி அரசாங்கக் கோப்புகள் நீலம்,மஞ்சள் நாடாக்களுடன் உற்பத்தி செய்ய உத்தரவு இட்டு விடலாம் மன்னர்மன்னா”

(75) "அரசே, சாலைகளில் வாகனப் போக்குவரத்து மிகவும் அதிகரித்து விட்டது. நெரிசல் ஏற்பட்டால் குறைந்தது நிலைமையை சரியாக நான்கைந்து மணி நேரம் பிடிக்கிறது. என்ன செய்யலாம் மன்னா"?

"அவ்வளவுதானே, எல்லா வாகனங்களுக்கும் தெருவிற்குத் தெரு சுங்கச் சாவடி அமைத்து வரி வசூல் செய்ய உத்தரவிடுகிறேன்".(76) "அரசே, ஒரு சந்தேகம். உங்களிடம் கேட்கலாமா"

"தாராளமாக அமைச்சரே. ஆமாம், என்ன சந்தேகம்"?


"இந்த மர்மக் காய்ச்சல் என்று பத்திரிக்கைகளில் குறிப்பிடும் காய்ச்சலுக்கு உலகின் மற்ற நாடுகளில் என்ன பெயர் அரசே"?

(77) "அண்டை நாட்டில் அணைதிறக்கும் போராட்டத்திற்கு பங்காளிகளுக்கு அழைப்பு விடுத்தோமே, என்ன சொன்னார்கள்?

"பாதுகாப்பு இல்லாத இடத்தில் போரிடுவது மன்னரின் இன்னுயிருக்கு ஆபத்து. 
மன்னர் இன்னுயிரை விட தண்ணீர் முக்கியமில்லை.
 ஆகவே இங்கேயே பத்திரமாக தேர் மறியல் போராட்டம் செய்து கொள்கிறோம் என்று சொல்லி விட்டார்கள் அரசே".

(78) "அரசவையில் நிலை கொள்ளாமல் நெளிந்தபடி இருந்தீர்களே என்ன பிரச்சனை மன்னா"

"அதுவா, புதியதாக வாங்கிய சிம்மாசனம் மிகவும் அரிக்கிறது அமைச்சரே என்ன காரணம்"?


"நீங்கள் அரியணை வாங்க அல்லவா உத்தரவிட்டீர்கள், சிம்மாசனம் இல்லையே மறந்து விட்டீர்களா மன்னா".

(79) "அமைச்சரே, நம் நாட்டில் புகழ் பெற்ற லாண்டரி உரிமையாளர்கள் அனைவரையும் உடனே வரவழையுங்கள்".

"ஆகட்டும் மன்னா. என்ன காரணம்"?


"அவர்களிடம் சக்கரவர்த்திக்கு 'வெள்ளை அறிக்கை' தயாரிப்பது குறித்து ஆலோசிக்க வேண்டுமல்லவா அமைச்சரே".
(80) "மன்னா, SEBI யிலிருந்து எச்சரிக்கை கடிதம் வந்துள்ளதே.
 என்ன பிரச்சனை"?

"அப்படியா, அரசியார் நடத்தும் தீபாவளி பண்டையும் பட்டியலிட்டு NSE, BSE இல் சேரக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தேன் அவ்வளவுதான்".


No comments:

Post a Comment