Monday, 17 October 2016

மன்னாதி மன்னன் ஜோக்ஸ் - (7)

(61) "அண்டை நாட்டு அரசரின் பேச்சு வாஸ்துவமான பேச்சு என்கிறார்களே அமைச்சரே, உண்மையா"?
"ஆம். மன்னா. அவர் பேசும் போது ஒவ்வொரு சொல்லையும் வாஸ்துப்படி திசை பார்த்துத்தான் பேசுவார்".


(62) "அந்த பத்திரிக்கையில் இந்த வாரம் வெளி வந்துள்ள கதை, கட்டுரை, கவிதை எல்லாவற்றிலும் வார்த்தைகள் கோர்வையாக இல்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் உள்ளதே, அமைச்சரே"

 "ஆம் மன்னா, அந்த பத்திரிக்கை இந்த வாரம் வாஸ்து சிறப்பிதழ் ஆக வெளி வந்துள்ளது”(63) "மதுபானக் கடைகளில் 'கட்டிங்' பிரிப்பதில்தான் நிறைய தகராறுகள் வருகிறது என்று பத்திரிக்கைகளில் அடிக்கடி செய்தி வருகிறதே அரசே. என்ன செய்யலாம்"?
ஒவ்வொரு மதுபானக் கடையிலும் ஒரு
'கட்டிங் அம்புட்ஸ்மன்' பதவியை உருவாக்கி சரியாக அளந்து தர ஏற்பாடு செய்யுங்கள் அமைச்சரே".(64) "பூசணிக்காய் உடைத்து திருஷ்டி கழிப்பதை உடனடியாகத் தடை செய்யச் சொல்லி திடீரென உத்தரவிட்டீர்களே மன்னா, என்ன காரணம்"?
"ஒன்றுமில்லை. அதில் வரையப்பட்டுள்ள படம் அரசியின் முகச் சாயலில் இருக்கிறதென்று அரசியார் கோபமாக இருப்பதால்தான் அமைச்சரே".


(65) "மன்னர்மன்னா, சக்கரவர்த்தி பிரிக்ஸ் உச்சி மகாநாட்டை நாம் நடத்த ஆணையிட்டுள்ளாரே. ஏற்பாடுகள் செய்ய வேண்டாமா"?
"ஆம் அமைச்சரே, எல்லா செங்கல் சூளை முதலாளிகளுக்கும் உடனே அவசரச் செய்தி அனுப்பி விடுங்கள்".

(66) "என்ன அமைச்சரே, கோவிலுக்குச் செய்து வந்த தங்க ரதம் ஏன் பளபளவென்று ஜொலிக்காமல் கருத்துப் போய் இருக்கிறது என்று பக்தர்கள் கேட்கிறார்களே. என்ன நடந்தது"?
"அது மன்னா, கருப்புப் பணத்தில் வாங்கிய தங்கத்தில் செய்தது அல்லவா அதனால் அப்படி உள்ளது".

(67) "அரசே உங்கள் வீரத்தை கேலி செய்து புடவை, பிளவுஸ் பிட், வளையல், குங்குமம் எல்லாம் பக்கத்து நாட்டரசர்கள் அனுப்பியுள்ளார்கள். அவற்றை என்ன செய்ய மன்னா"?
"தீபாவளி நேரமல்லவா. தி. நகர் ரங்கநாதன் தெருவில் அவற்றை விற்க உடனே அமைச்சர்கள் செல்ல உத்தரவிடுகிறேன்".

(68) "மகாராஜா பெண்கள் ஆடை அணியகம் என்று ஒரு புது கடை திறந்துள்ளது மன்னா. வியாபாரம் சக்கைபோடு போடுகிறது மன்னர்மன்னா. கடை கல்லாவில் நம் வணிக அமைச்சரைப் பார்த்தேன் அரசே".
"அடப்பாவி நமக்கு வந்த புடவை மற்றும் இதர ஐட்டங்களை ஆட்டைய போட்டு விட்டானா. யாரங்கே கடையை உடனே சீல் வையுங்கள்".


(69) "அமைச்சரே, என்னவோ தெரியவில்லை இன்று காலை முதல் தன்மான உணர்ச்சியும், ரோசமும் மனதில் உற்றெடுக்கிறது".
"ஒரு கால் இன்று காலையில் கோல்கேட் ஆக்டிவ் சால்ட் பற்பசை வைத்து பல் துலக்கியதால் இருக்குமோ அரசே"?


(70) "அமைச்சரே, தலைநகரில் எங்கே நான் நகர்வலம் போனாலும் கண்ணில் படும் இடத்தில் எல்லாம் ஒரே நாய்கள் கூட்டம் துரத்தி வருகிறது என்ன செய்யலாம்"?

"உங்களுக்கு கண்ணில் பொரை இருப்பதால் இருக்கலாம் மன்னா. உடனே கேட்ராக்ட் அறுவைச் சிகிச்சைக்கு ஏற்பாடுகள் செய்கிறேன்".


3 comments: