Saturday, 5 November 2016

அண்ணே அண்ணே ஜோக்ஸ் - (3)

(21)
மணல் கொள்ளையர்களுக்கு பாடம் புகட்ட ஆசிரியர்கள் தேவை!
டுபாக்கூர் நாட்டு அரசு அறிவிப்புகள்
எண் டுநாஅ/1268/28.10.3046

பதவி - மு.நி.பேராசிரியர்( மண்ணியல்)
எண்ணிக்கை: 100 பதவிகள்
சம்பளம் - ரூ 20000 /- மாதம்
தகுதி - அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து *M.Sr பட்டம்
மற்றும் மண்பாடி லாரி, JCB Pokclain ஓட்டுதலில் ஓராண்டு அனுபவம்.
வயது - 18 க்கு மேல்
* Master of Sand Robbery
விண்ணப்பிக்க கடைசி நாள்: 01.01.3047 மாலை 5 மணி வரை
விண்ணப்பிக்க கட்டணம் : ரூ5000/-
(திருப்பித்தரப்படமாட்டாது)
இதர சலுகைகள்(லஞ்சம் உட்பட) தகுதி அடிப்படையில் வழங்கப்படும்.


(22)
"ஏய், என்னடா வீட்டு முன்னால ஒரே அட்டை டப்பாவா அடுக்கி வைச்சிருக்கு"
"அதுவாண்ணே, நீங்கதான் மாமூலா 'டப்பாஸ்' அனுப்பி வைக்கச் சொன்னீர்களாமே"


(23)
"அந்தக் கட்சிக் தலைவரை புரிஞ்சிக்கவே முடியாது அண்ணே"
அப்படியா! என்ன சொல்ரே?
"நம்ம தலைவர் நம்பிக்கையோட தீர்மானம் கொண்டு வராரு அதை ஆதரிக்காம அவரு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால்தான் ஆதரிப்பாராம் அண்ணே".


(24)
உடும்பை அறுத்து   ரத்தத்தை பிளாஸ்டிக் டம்ளரில் பிடித்து சோடா ஊற்றிக் குடித்தவரை போலீஸ் தேடுகிறது

பத்திரிக்கைச் செய்தி 29/10/2016.

இன்ஸ்பெக்டர்:
"குடிச்சிட்டு பிளாட்பாரத்தில படுத்திருக்கிற அந்த ஆளை எழுப்பி கூட்டி வர முடியலையா? என்னய்யா நினைவு இருக்கா"?
கான்ஸ்டபிள்:
"நினைவு எல்லாம்  இருக்கு அய்யா. அவன் உடும்பு இரத்தம் குடிச்சிட்டு  உடும்புப்பிடியா  படுத்திருக்கானாம் வேலையத்த பய".


(25)
"அண்ணே அந்த ஊரில புதுசா நாய் பண்ணை ஆரம்பிச்சிருக்காய்ங்க போல,  ஊருக்குள்ள ஒரே குரைப்புச் சத்தம்".
"அட , அது கேரளாலிருந்து இறக்குமதியா  வெறி பிடித்த தெருநாய்களை லாரியில ஏத்தி அனுப்பியிருப்பாய்ங்க,  ஆஸ்பத்திரி குப்பை அனுப்பின மாதிரி".


(26)
"தலைவரின் செயற்குழுக் கூட்டம் படு உருக்கமா  இருந்திச்சாமே"?
"ஆமண்ணே, திடீர்னு கரண்ட்  போயிட்டதுல ஏர்கண்டிசன், ஃபேன் எதுவும் வேலை செய்யலை. ஒரே வேக்காடு. புழுக்கத்தில உருக்கம்".


(27)
"அண்ணே அரசாங்கத்திலிருந்து என்னமோ நம்ம தெருவில் எல்லாருக்கும் நோட்டீஸ் கொடுத்தாங்களாமே? என்ன விஷயம்?

"நாடு ஏழையா இருக்கறதுக்குக் காரணம் வீடுங்க வாஸ்துப்படி இல்லாததுதான். அதனால எல்லா வீடுகளையும் இடிச்சு கட்ட வேண்டும் என்று வாஸ்து துறையிலிருந்து கொடுத்திருக்காங்க”.


(28)
"ஃபுல்லா தண்ணியடிச்சிட்டு மப்பில பிரச்சனை பண்ணிய அந்த போலீஸ்காரரை என்ன பண்ணினாங்க அண்ணே"?
"மொதல்ல 'தண்ணியில்லா காட்டுக்கு' மாற்ற நினைச்சாங்களாம் , ஆனா அப்படி ஒரு இடமும் தமிழ் மண்ணில் இல்லாததால்
'கட்டுப்பாட்டறைக்கு' மாத்திட்டாய்ங்க".


(29)
"அடுத்த மூன்றாண்டுகளில் நம் நாடு பருப்பு உற்பத்தியில் தன்னிறைவை எட்டி விடும்"  மத்திய அமைச்சர் தகவல்.

அப்புறமா எந்த நாடும் "நீ என்ன பெரிய பருப்பான்னு" நாக்கு மேல பல்லப் போட்டு நம்ம நாட்டைப் பார்த்து கேட்க முடியாது பாத்துக்கிடுங்க. ஆமாம்.


(30)
"அண்ணே வெவசாயிக்கும் தூதருக்கும் என்னண்ணே வித்தியாசம்"?
" அட, இது கூடவா தெரியாது  வெரங்கெட்டவனே.
வெவசாயி உழவு வேலை செய்வாரு
தூதரு உளவு வேலை செய்வாரு அம்புட்டுத்தான்".

No comments:

Post a Comment