Tuesday, 15 November 2016

அண்ணே அண்ணே ஜோக்ஸ் - (8)

(71)
"அவரு மோடி பொருளாதாரத்தின் கழுத்தை ஒரு திருகு திருகி விட்டு போனாலும் போனாரு அண்ணே,
இங்க 6 வது நாளா குவார்டர் பாட்டில் கழுத்து மூடி திருக முடியாத நாம சுய நினைவோட இருக்க வேண்டியதாப் போச்சேண்ணே".



(72)
"அந்த கட்சியிலிருந்து 4058 வது வட்டச் செயலாளரை நீக்கிட்டாங்களே. அப்படி என்ன செய்து விட்டாரண்ணே"?
"அது ஒன்னும் இல்லடா, மண்சோறு சாப்பிட 5 லோடு பச்சை மண்ணு வாங்கியதா கணக்குக் கொடுத்தாராம்".



(73)
"என்னடா சென்றாயா ஏண்டா இப்படி மூட் அவுட்டாகி மூலையில உக்கார்ந்திட்டே"?
"போண்ணே, புது 2000 ரூபாய் நோட்டில என் படம் போட்டிருந்தது ன்னு நினைச்சு ஆசையாக வாங்கிப் பார்த்தா எதோ சந்திராயனாமே அது படம் போட்டு இருந்திச்சண்ணே. அதான்ணே".



(74)
"அண்ணே உங்கள மாவட்டச் செயலாளரா கட்சி அறிவிப்பு வந்திருக்காமே. இந்தான்ணே என் எளிய பரிசு பிடிங்கண்ணே".
"ஏண்டா ஸ்வீட்டிற்கு பதிலா உறுகாய் பாட்டில், லூசாயிட்டயா"?
"அதெல்லாம் இல்லண்ணே. உங்களுக்கு இனிமே அதிகார போதை தலைக்கேறிடும் அப்படின்னு கட்சியில பேசிக்கிட்டாய்ங்க".



(75)
"கட்சியிலிருந்து நீக்கிட்டா என்னண்ணே, நாம 'மாற்ற முடியாமல் தவிக்கும் கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் சங்கம்' ஆரம்பித்திரலாம்ணே. அதில் பணம் செலவு பண்ணி தலைவராயிடலாம் அண்ணே".






(76)
" நேற்று 'பழைய காலுறை' தொலைக்காட்சியில் 'மறைந்து நின்று ஏசு' நிகழ்ச்சியில் என் பேச்சு எப்படி டா இருந்திச்சு"?
"தலைவரே நல்லாத்தான் இருந்திச்சு. ஆனா என்னதான் ஆவேசமா பேசினாலும் தூங்கும் கருப்புப் பண முதலையை இடறாதே என்றெல்லாம் பேசறது கொஞ்சம் ஓவர்தான்ணே".



(77)
"கால மாற்றத்தில வர எல்லாம் தலை கீழா மாறிப்போச்சண்ணே".
"ஏன்டா, சொல்வதை கொஞ்சம் தெளிவாத்தான் சொல்லேன்"
"அதுவான்னே, முன்னெல்லாம் 'எம்பிளாய்மெண்ட் எக்ஸ்சேஞ்ச்' போன பல பேர் இப்ப 'எக்ஸ்சேஞ்ச் எம்பிளாய்மெண்ட்' க்கு போறாங்களே அத்த சொன்னேண்ணே".


(78)
"ஏண்டா மாரி, ஆன் லைன் பேங்கிங்தான் இப்பெல்லாம் பண்ணிட்டிருக்கேன் அப்படின்னு ஊர்க்குள்ள சொல்லிக்கிட்டு அலையறயாமே, எப்படா கம்பியூட்டர் எல்லாம் கத்துக்கிட்ட"?
"அட போங்கண்ணே, தினந்தினம் பேங்கில லைன்ல நின்னு நோட்டு மாத்திட்டு வரேனில்ல, அதை அப்படி பந்தாவா சொல்லிக்கிட்டேன்ணே".

(79)
"அந்த கல்யாண வீட்டில் சாப்பிட்டு வந்தவங்களுக்கு எல்லாம் கூப்பிட்டு இடது கையில் மருதாணி போடறாங்களே என்ன உபசாரம் என்ன உபசாரம்".
"அதெல்லாம் ஒன்றுமில்லை. யாரும் இரண்டாம் தடவை பந்திக்கு சாப்பிட வராமல் தடுக்க செய்த ஏற்பாடாம்".


(80)
"ஏண்ணே அம்மா, தம்பி, அக்கா, ஆயா, நைனா எல்லாரையும் பேங்குக்கு அனுப்பினீங்க. பேங்க் போயி மாத்த நாங்க  எல்லாம் இல்லை"?
"ஏன். அதில் என்ன சிக்கல்டா"?
"சிக்கல்லாம் இல்லண்ணே. எதிரிக் கட்சிக்காரங்கதான் கருப்புப் பண முதலையின் குடும்பம் நோட்டு மாற்ற தெருவில் நிற்கிறது ன்னு அவிங்க டீவி செய்தியில் போட்டு மானத்தை வாங்குறான்ணே".


2 comments:

  1. பச்சை மண் மிகவும் இரசித்தேன் நண்பரே தொடரட்டும் அதிர் வேட்டுகள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி. உங்கள் பாராட்டு என்னை அதிகம் உற்சாகமூட்டுகிறது. நன்றி.

      Delete