Saturday, 5 November 2016

அண்ணே அண்ணே ஜோக்ஸ் - (4)

(31)
"அண்ணே நேற்று இரவு அந்த படத்தயாரிப்பாளர் உங்களை கதை சொல்ல வீட்டிற்கு வரச் சொல்லியிருந்தாரே, காயா பழமாண்ணே"
"அந்த சோகக் கதையை ஏன் கேட்கிற, அவரு பேரனை இரவில் தூங்க வைக்க கதை சொல்ல வரச் சொன்னாராம்".

(32)
"ஷாப்பிங் போன இடத்தில் 'பார் கோட்'(Bar Code) என்ற பெயரைப் பார்த்து கம்ப்யூட்டர்,லேப்டாப் விற்பாய்ங்க போல என்று நினைச்சேன்.
உள்ள போய் பார்த்தா 'பட்டாபட்டி' அண்டர்வேர் விக்கிறாய்ங்கண்ணே".


(33)
"தலைவரே, தலைநகரை அமைதிப் பூங்காவா மாற்ற என்ன நடவடிக்கை எடுக்கிறது என்று காவல் துறைத் தலைவர் கேட்கிறார்"
"எல்லாப் பூங்காகளிலும் பேசுவதற்குத் தடை விதித்து விடலாம். மீறி யாராவது பேசினால் கைது பண்ணச் சொல்லிடலாம்"


(34)
"பிளாட்பாரங்களை தடுத்து நாம  வச்ச மெகா  ஃபிளக்ஸ் பேனர் பத்தி மக்கள் என்னடா பேசறாங்க"?
"செமண்ணே".
"அப்படியா"?
"ஆமண்ணே,  நாம நம்ம இடத்தில்
சரியாத்தான் வச்சிருக்கிறோம்  அதிலே தப்பே இல்லை என்கிறாய்ங்க".

(35)
"அண்ணே அந்த  அமைச்சரை ஏன் திடீரென்று பதவி நீக்கம் பண்ணிட்டாங்க"?
அத ஏன்டா கேக்கற, இப்பத்தான் அவர் போலி மந்திரி என்று கட்சியில கண்டுபிடித்தார்களாம்".

(36)
"என்னண்ணே நம்ம தலைவர் பேரணியில ஒரே வட நாட்டு ஆளுங்களா  இந்தியில கோஷம் போட்டுக்கிட்டு போறாய்ங்க"?
"அது பேரணிக்கு உள்ளூர் ஆளுங்க கூலி அதிகம் கேட்கறதால காண்ட்ராக்டர் இப்படி ஏற்பாடு பண்ணிட்டாராம்டா".

(37)
"அண்ணே நிறைய சைனாக்காரங்க வந்து நம்ம கட்சி ஆபீசில் உக்கார்ந்திருக்காங்களே, தலைவர் சீனாவில கட்சி தொடங்கப் போறாராணே"?
"இல்லை டா, அவங்க எல்லாம் கியாரண்டி இல்லாத சீப் ரேட் டூப்ளிகேட் தொண்டர்களாம்". சைனாவிலேர்ந்து மத்த கட்சிகளுக்கு விற்க  தலைவர் இறக்குமதி   செய்திருக்கார்".

(38)
"அந்த குப்பைத் தொட்டி பக்கத்து பில்லர் பாக்ஸிலிருந்து மின்சாரம் திருடிய வழக்கில் நீங்க சொன்ன பதிலைக் கேட்டு நீதி மன்றமே திகைச்சிப் போயிட்டதா கேள்விப்பபட்டேன்ணா. அப்படி என்னண்ணா சொன்னீங்க"?

"பழைய கெட்டுப் போன மின்சாரத்தை எல்லாம் குப்பையில அரசாங்கம் கொட்டியிருக்குன்னு
நினைச்சி வேஸ்ட்டா போறத  ஏழை நான் பயன்படுத்தினேன் என்றுதான் சொன்னேன் பா".


(39)
"அண்ணே வீர வாள் பரிசளித்தாங்களே அப்போ என்ன மனதில் தோனிச்சு "?
" சே, என்னடா வாழ்க்கை இது. கத்தியை  கொடுத்து வெட்டக் கூடாது என்கிறாய்ங்க. போறாக்குறைக்கு   ரத்தம் சிந்தத் தயார் ன்னு  முழுமனசோட  சொல்ல ஒரு சித்தப்பு கூட நமக்கு இல்லையே அப்படின்னு வருத்தமா இருந்திச்சுடா".


(40)
"3027 வட்டத்தின் சார்பாக உங்களுக்கு சிலை வைக்கறேன் வந்தவய்ங்களை ஏன் வேண்டாம்னு திருப்பி அனுப்பிட்டீங்க"?
"அந்த வட்டச் செயலாளர் பிடிக்காதவய்ங்க சிலை மேல எச்சம் போட புறாங்களை பழக்கவருன்னு தக்க சமயத்தில 406 வது மாவட்டச் செயலர் தகவல் சொல்லிக் காப்பாத்திட்டாரு".


2 comments:

  1. அனைத்தும் சரவெடிகள் இரசித்தேன் நண்பரே
    மந்திரியில்கூடவா போலி ? ஹாஹாஹஹா ஸூப்பர்

    ReplyDelete
  2. மிக்க மகிழ்ச்சி. நன்றி சார்.

    ReplyDelete