Saturday, 12 November 2016

அண்ணே அண்ணே ஜோக்ஸ் - (7)

(61)
"அண்ணே காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் திட்டம் அடியோடு ரத்தாகி விட்டதாம்ணே. ஒரு வேளை வேற எங்கியாவது மலைத்தேன் கிடைச்சிடுச்சிருச்சா அண்ணே"?(62)
"உங்க தெருவில் சென்ட்ரல் கவர்மெண்ட் கஸ்டம்ஸில் வேலை பார்த்த பந்தா ஆபீசர் ஒருத்தர் இருந்தாரே ,அவர உங்களுக்குத் தெரியுமா"?
" ஓ, நல்லாத்தான் தெரியுமே"
"இப்ப எங்கே இருக்கார்"?
" லஞ்ச ஊழல் வழக்கில மாட்டிக்கிட்டு சென்ட்ரல் ஜெயிலில் கஷ்டத்தில இருக்கார்".
(63)
"என்னப்பா தேவராசா சோகமா நிக்கிறேயே என்ன பிரச்சனை"?
"அதுவா அய்யாவை பார்க்க வரவங்க ஏதோ ரூபாய் 50,100 ன்னு பிரியமா கொடுப்பாய்ங்க இல்லையா"
"ஆமா. அதில் என்ன சிக்கல்"?
"அந்த காசை எல்லாம் அய்யாவே பிடிங்கிக்கிட்டு பழைய 500,1000 நோட்டுகளை கொடுத்திட்டு போறார் சார்".

(64)
"அந்த 10 மாடி கவர்ன்மெண்ட் ஆபீசில் பேஸ்மெண்டில இருக்கிற ஆபீசர் பேரென்னப்பா? போற வர எல்லா பொதுமக்களையும் கடிச்சிக் குதறி எடுக்கிறாரே".
"அட, நீங்க நம்ம'காண்டுடீப்பன்' சாரைச் சொல்லுறீங்க போலிருக்கு".


(65)
"வீட்டுக்கு வீடு டெய்லி 2000/- ரூபாய் கொடுக்க நம்ம கிட்ட கவுர்மெண்ட் காண்ட்ராக்ட் விட்டிருக்கலாம் அண்ணே எலக்சன் டயத்தில கொடுக்கற ஸ்பீடுல இப்பக்குள்ள சத்தமில்லாம கொடுத்து முடிச்சிருப்போம். இப்படி ஜனங்கள லோ லோன்னு அலைஞ்சிருக்க மாட்டாங்க. ஹூம். யாருக்கு இதெல்லாம் புரியுதண்ணே".


(66)
அண்ணே நல்லா விசாரிச்சிட்டேன். நீங்க பிடிக்கறதற்குக் கேட்ட 'கருப்புப் பண முதலை' கள் எதுவும் முட்டுக்காடு முதலைப் பண்ணையில் இல்லையாம்ணே. எல்லாம் இறைச்சி,மீன் சாப்பிடும் முதலைங்கதானாம்".


(67)
"அண்ணே, உங்க ராஜ தந்திரம் யாருக்கும் வராதுண்ணே. இனிமே மாற்றவே முடியாது என்கிற நிலையில் ரூ.500,1000 பழைய நோட்டுகளை அள்ளிட்டுப் போய் எதிரிங்க கணக்கில் தலைக்கு 5 லட்சம் போட்டு வருமான வரி ரெய்டு பண்ண வச்சீங்களே, அங்கதான் நீங்க நிக்கிறீங்க தலைவரே.


(68)
"என்னடா, நேத்து முழுசும் ஆளையே காணல. எங்கிட்டு போய் தொலைஞ்ச"?
"அதுவாண்ணே நம்ம ஊட்டண்ட இருக்கிற ATM ல் பணம் எடுக்க நிறைய கூட்டம் வந்திச்சா, உடனே அங்க 10 ரூபாய், 20 ரூபாய்க்கு சிறப்பு வரிசை ன்னு போர்ட் வைத்து நானும் என் மச்சானும் பேங்க் பேரில் டிக்கெட் அடிச்சி சனங்களுக்கு பப்ளிக் சர்வீஸ் பண்ணிட்டிருந்தோம்ணே".


(69)
" சாக்பீஸில் 1,2 நம்பர் போட்டு 50 செங்கல் 4 செட் ரெடி பண்ணச் சொல்லிக் கேட்டீங்களேண்ணே. நம்பர் போட்ட கல் எதுக்கண்ணே"?
" நம்ம ஏரியாவில உள்ள 4 ATM முன்னால க்யூ வரிசையா தினம் காலையில் 5 மணிக்கே வச்சி ரிசர்வ் பண்ணிட்டு வந்துட்டா இடத்தை 50 ரூபாய்க்கு விக்கலாமேடா தம்பி".


(70)
"அண்ணே கவலைப்படாதீங்கண்ணே. நல்ல யோசனை ஒன்னு கைவசமிருக்கு"
"அப்படி என்னடா நல்ல யோசனை"?
"கல்யாண மண்டபம் ஒன்ன ஒரு வாரத்துக்கு சீப்பா எடுத்து
'ஸ்டாக் கிளியரன்ஸ் சேல் 
25% தள்ளுபடி, மெகா எக்ஸ்சேஞ்ச் ஆபர்'
போட்டு பழைய 500,1000 ரூபாய் நோட்டைக் எல்லாம் தள்ளி விட்றலாம்ணே".

3 comments:

  1. அனைத்தும் அருமை நண்பரே சிரிக்க வைத்தன...

    ReplyDelete
  2. மிக்க மகிழ்ச்சி நண்பரே. நன்றி.

    ReplyDelete