Wednesday, 16 November 2016

அண்ணே அண்ணே ஜோக்ஸ் - (9)

(81)
"அண்ணே நீங்க சொன்ன மாதிரி வருமான வரிக் கணக்கை தாக்கல் பண்ண முடியாதாம். தப்பா இருக்காம்ணே. ஆடிட்டரு போன் பண்ணிச் சொன்னாரு".
"அப்படியா, என்ன பிரச்சனையாம்? கேட்டியா".
"அதான்ணே சின்னக்காவிற்குக் கொடுத்ததை எல்லாம் செகண்ட் ஹவுஸிங் இன்ட்ரெஸ்ட்டா காட்டக் கூடாதாம்ணே".(82)
"நீங்க ஆபீசருக்கு மாமூல் கொடுத்துட்டீங்கதான் ஒத்துக்கிறேன். அதுக்காக அவர் விரலில் அழியாத அடையாள மை வைப்பேன் என்கிறதை எல்லாம் ஏத்துக்க முடியாது சார்".(83)
"அந்த ஆலமரத்தடி இட்லிக் கடை ஆயாவை 200 ரூபாய் தரோமின்னு கூலி பேசி வரிசையில் நிக்க வைச்சு பணம் வாங்க கஷ்டப்பட்ட மாதிரி பேசச் சொல்லி பேட்டி எடுத்தமே, அத நம்ம கட்சி டீவியில் போட வேண்டாமாம், தலைவர் சொல்லிட்டாராம்".
"ஏணுங்கண்ணே, எதனாலயாம்ணே"?
"அந்தக் கிழவி 400 ரூபாய் வாங்கிக்கிட்டு எளிதாக இன்னிக்கே மூணு தபா பணம் வாங்கிட்டதா எதிரிக் கட்சி டீவிக்கும் பேட்டி கொடுத்ததாம்".(84)
"என்னடா முனியா, ஊருல்ல உள்ள எல்லா பேங்கிலும் கடன் வாங்கிட்டு ஓடிப் போயிடலாம் அப்படின்னு எப்படி அவ்ளோ தைரியமாய்ச் சொல்கிறாய்"?
"நம்ம ஊருத் தலைவர் அதை எல்லாம் பேங்க் ஆளுங்க கிட்ட சொல்லி வராக்கடனா தள்ளுபடி பண்ணிடலாம் கவலைப் படாதே, எத்தினி கோடியானாலும் நான் பார்த்துக்கிறேன் என்று உறுதி சொல்லிட்டாரு".


(85)
"நம்ம ஆயாவை வரிசையில நிக்க வைத்து பேர் வாங்கறது நமக்கு செட் ஆவாதுன்னு சொன்னா நீங்க கேட்கவில்லை".
"ஏண்டா, செய்தி பேப்பரில் மொத பக்கத்தில் வரலையா"?
"கொட்டை எழுத்தில மொத பக்கத்தில் எல்லா பத்திரிக்கைகளிலும், 'கருப்புப் பணத்தை மாற்ற வயதான தாயை கொளுத்தும் வெயிலில் நிற்க வைத்து கொடுமை' அப்படின்னிட்டு போட்டிருக்காய்ங்கண்ணே".
(86)
"மேனேஜர் சார் எனக்கு உங்க பேங்கில் கடன் தர வேண்டும்".
"சார், நீங்க ஏற்கெனவே கடன் வாங்கி கட்டாமல் பாக்கி வைச்சிருக்கீங்க. ஏன் கட்டவில்லை"?
"அடுத்த வாரம் கட்ட நினைத்திருந்தேன். அதுக்குள்ள பணம் செல்லாதுன்னு ஆயிடுச்சா. செல்லாத பணத்தை கொடுத்தால் தாயா புள்ளையா பழகின உங்களை ஏமாற்றின மாதிரி இல்லையா. அதுதான் கட்டவில்லை சார்".(87)
"அண்ணே கருப்புப் பணத்தை அடியோடு சிம்பிளா ஒழிச்சிடலாம்ணே"
"டேய், என்னடா புதுசா கரடி விடறயா"?
"ஆமாண்ணே. பனாமா, சுவிட்சர்லாந்து நாடுகளோட அதிபர்கள் கிட்ட பேசி அவிங்க நாட்டு நோட்ட மதிப்பிழக்க வைச்சிட்டா பிரச்சனை தீரந்திடுமேண்ணே".(88)
"சார் நான் டிஸ்டிலெரி ஆரம்பித்து ஜின் வகை மது தயாரிக்கப் போறேன். கடன் கிடைக்குமா சார்"?
"கிடைக்கும்,ஆனா அதற்கு மார்ஜின் காட்ட வேண்டும்".
"அவ்வளவு தானே சார். அந்த 'குயின் ஸ்பேரோ' கம்பெனி மாதிரி காலண்டரில் தாராளமாக மார் ஜின் விளம்பரத்தில் காட்டிடறேன்".(89)
"சார் அந்த பாரோயர்(Borrower) பயங்கர விவரமா இருக்காரு".
"அப்படியா, எஹை வைத்து அப்படிச் சொல்லறீங்க"?
"பின்ன என்ன சார் லோனுக்கு விண்ணப்பம் பண்ணும் போதே வாராக் கடன் புக்கில வரவு வைச்சிடுங்க. எதுக்கு இரட்டை வேலை. உங்க வேலைப்பளு குறையும் என்கிறார் சார்".


(90)"உங்க பாங்க்கில் கடன் வாங்க நிறையப் பேர் இரண்டு வரிசையாக பிரிந்து நிற்கிறாங்களே. ஏன் இரண்டு வரிசை சார் ? 
"அதில் ஒன்று சாதா வரிசை. அதுக்கு எல்லா டாக்குமெண்ட்டும் பக்காவா வைச்சிருப்பவர்களுக்கு. இதில் லோன் கிடைக்க தாமதம் ஆகும்.
மற்றது எக்ஸ்பிரஸ் கிரீன் சானல் வரி்சை. இதில் வெளிநாட்டுக்கு ஓடிப்போக பாஸ்போர்ட், விஸா,அடுத்த வாரத்தில் லோன் கிடைச்சதும் ஓடிப்போக விமான டிக்கெட் காட்டினால் போதும். உடனே சாங்ஷன் பண்ணிடுவோம்".2 comments:

  1. எல்லாமே ரசித்தேன் கிழவியை வரிசையில் நிற்க வைப்பது ஸூப்பர் சமீபத்தில் டிவியில் வந்த கிழவி கதைபோல் இருந்தது வாழ்த்துகள் நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.மிக்க மகிழ்ச்சி.

      Delete