Monday, 7 November 2016

அண்ணே அண்ணே ஜோக்ஸ் - (5)

(41)
"கட்சி விரோத நடவடிக்கைக்காக உங்களை கட்சி விட்டு நீக்கிட்டாங்களாமேண்ணே. என்ன ஆச்சண்ணே"?
"ஊழலை படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட தலைவர் சொன்னாரா, அதுக்காக எதிரிக் கட்சிக் தலைவரை வித விதமா போட்டோ எடுத்து பேஸ்புக்கில் போட்டேன்.அதுதான் தப்பாயிடுச்சுடா"


(42)
"அண்ணே நல்லா விசாரிச்சிட்டேன். அந்த ஆபீசருங்க எல்லாம் எதிரே இருக்கிற 'சங்கர் லஞ்ச் ஹோம்' ஓட்டலில் சாப்பாடு நேரத்தில் தான் லஞ்சம் வாங்குவாங்களாம்".
"அப்படியா, அதனாலதான் இப்போ அதன் பெயர 'சங்கர் லஞ்ச ஹோம்' ன்னு மாத்திட்டாய்ங்களா".


(43)
"புதிசா கட்டின கழிப்பறைக்கு உடனே உங்க பேர் வைச்சு போர்ட் படம் எல்லாம் சீக்கிரம் செய்துடணும்ணே".
"ஏண்டா, என்ன கிண்டலா"?
"இல்லண்ணே, குப்பைத் தொட்டியில் எழுதியிருக்கிற உங்க பெயரை அழிக்கணுமாம். தேர்தல் கமிஷனில் நிறைய பேர் புகார் கொடுத்திருக்காங்கண்ணு இன்னிக்கு தினமலர் பத்திரிக்கையில் 13 ஆவது பக்கத்தில செய்தி வந்திருக்கண்ணே”.


(44)
"உங்க ஆஸ்பத்திரியில டாக்டர், நர்ஸ் எல்லாம் ஏன் ஒரு கடிகாரத்தை சுற்றிட்டு வந்த பின்னால்தான் நோயாளியை பார்க்கிறாங்களே. என்ன காரணம்"?
"எங்க ஆஸ்பத்திரி ரவுண்ட் த கிளாக் சர்வீஸ் ஆஸ்பத்திரியாச்சே அதனால்தான் சார்".


(45)
"அண்ணே நாம போன அந்த ஆபீசில் எல்லா ஊழியர்கள் மேசையிலும் 24×7 அப்படின்னு போட்டிருக்கு. ஆனால் வெளியே அலுவலக வேலை நேரம் 10 முதல் 5 வரை மட்டும் தான் என்று போட்டிருக்கு. அதற்கு அப்போ என்னண்ணே அர்த்தம்"?
"அது எல்லா நாளும் எந்த நேரமும் லஞ்சம் வாங்கப்படும் என்பதை நேரடியாக போட முடியாதே. அதனால் சிம்பாலிக்கா போட்டிருக்காய்ங்க".





(46)
"அந்த அலுவலகத்தில் மனுக்களை போடும் பெட்டிக்குப் பக்கத்தில் B D M என்று எழுதிய அறையில் பெரிய இயந்திரம் உள்ளதே அண்ணே. அது என்ன இயந்திரமண்ணே"?
"அதுவா, அது 'BRIBE DEPOSIT MACHINE' அதில் லஞ்சத்தை டிப்பாசிட் பண்ணிடலாமாம்".


(47)
நேற்று சரவணா ஸ்டோர்ஸ்க்கு போயிட்டு வந்த நம்ம ஆபீசர் படு சுறுசுறுப்பாக இருக்காரண்ணே". நிறைய புதுமை எல்லாம் உடனே செய்து விட்டாரண்ணே".
"அப்படியா. என்ன புதுமை செய்திருக்காரு"?
"ஆபீஸ் வாசலிலேயே எந்த தளத்தில் எந்த ஆபீசருக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்கணும் என்று தெளிவா விவர அட்டை வழங்க இரண்டு பேரை உடனே இன்னிக்கு போட்டுட்டாரேண்ணே".



(48)
"அண்ணன் ஏன் இன்னிக்கு கொஞ்சம் விந்தி விந்தி நடக்கறாரு தம்பி"?
"அதுவா, கட்சி தாவும் போது கால் சறுக்கியதில் சுளுக்கிடுச்சாம்ணே".



(49)
"நீங்க பெண் விடுதலைக்கு பல தடவை போராடியவர் என்று பேசிக்கிறாங்க அண்ணே. நெம்ப பெருமையாக இருக்கண்ணே".
"ஏய், அது அண்ணியை கள்ள சாராயம் வித்த கேசில் பிடிச்சபோதெல்லாம் போலீஸ் ஸ்டேசனில் பிரச்சனை பண்ணினதை உள்குத்தா சொல்லறாய்ங்கடா".


(50)
"எல்லா பத்திரிக்கை மேலும் அண்ணன் பயங்கர கோபமாக இருக்காரு. எந்த நிருபரையும் உள்ள விடாதேன்னுட்டாரு".
"அப்படியா. என்ன காரணம்"?
"சட்டசபையில் அவர் முதமுதலா வீரஉரை ஆற்றினாரில்லையா அதை பத்திரிக்கையில் 'கன்னிப் பேச்சு' என்று போட்டு அவமானப்படுத்திட்டாங்களாம்".




2 comments:

  1. ஹாஹாஹா 50-வது மிகவும் இரசித்தேன் நண்பரே வாழ்த்துகள்.

    ReplyDelete