Wednesday 9 November 2016

அண்ணே அண்ணே ஜோக்ஸ் - (6)

(51)
"அண்ணே செம்மரக்கட்டை கடத்திய வழக்கிலிருந்துதான் எப்படியோ தப்பிச்சீட்டீங்களே. அப்புறமும் ஏண்ணே விசனம்"?
"அண்ணி கிட்ட எவனோ செம்ம கட்டைய நான் கடத்தி மாட்டிக்கிட்டதா கொளுத்திப் போட்டு விட்டுட்டான்டா . ஊட்டாண்ட போயி ஒரு வாரமாச்சுடா".



(52)
"இந்த போலீஸ்காரங்க பாவம்ணே. மேலதிகாரிங்க கேஸ் பிடிக்க டார்கெட் வைக்கிறதால ரத்தக் கொதிப்பு வந்து விடுகிறதாம். சனங்க எல்லாரும் விதி மீறாமல் சரியான டாக்குமெண்டஸ் வைச்சுக்கிட்டு ஹெல்மெட் போட்டு வண்டி ஒட்டினால் இன்னும் ரத்தக் கொதிப்பு அதிகமாயிடுமே அண்ணே. இது அவிங்களுக்கும் புரியமாட்டேங்கு. என்னத்த சொல்ல".



(53)
"அந்த கோழிப்பண்ணை பள்ளிக்கூடத்தால ஒரே பிரச்சனை அண்ணே".
"என்னடா என்ன விஷயம்"?
"500,1000 ரூபாய் நோட்டெல்லாம் செல்லாது என்று ஆயிட்டதால,
எல்லா பெற்றோரும் கொறைஞ்சது ஒரு லட்சம் நன்கொடைப் பணத்தை 100 ரூபாய் நோட்டா மாற்றித் தரணுமின்னு பிரச்சனை பண்ணறாய்ங்கண்ணே".



(54)
"அந்த தனியார் பள்ளிக்கு கூடத்து வாசலில் என்ன கூட்டம் அலை மோதுகிறது"?
"100 செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுக்களை இப்ப மாற்றித் தருபவர்களுக்கு 2025 ஆம் வருடத்தில ஒரு எல் கே ஜி சீட் இலவசமா தராய்ங்களாம்ணே".


(55)
"என்னடா கண்ணகி சிலையண்ட ஒரே கூட்டமா இருக்கு. போலீஸ்காரங்க வேற எதோ செக் பண்ணிட்டிருக்காய்ங்க? என்ன விஷயம் பாரு"
"அது ஒண்ணுமில்லைணே, ஆதார் கார்ட் இல்லாம பீச்சில இலவசமா காத்து வாங்க வந்தவய்ங்களாம். இனிமேல ஆதார் இல்லாட்டா ஒரு மணி நேரத்திற்கு 10 ரூபாய் கட்டணமாம்".





(56)
"அண்ணே நம்ம ஏரியா பெருமாள் கோவில், ஈஸ்வரன் கோயில் வாசலில்களில் உங்களிடம் உள்ள மாற்ற இயலாத 500, 1000 ரூபாய் நோட்டுக்களை பக்தர்கள் குங்குமம், திருநீறு மற்றும் பிரசாதங்களை மடித்து எடுத்துச் செல்ல தந்ததிற்கு நன்றி தெரிவித்து அறிவிப்பு வைச்சிருக்காங்க, பார்த்தீங்களா"?


(57)
செந்தில்: " புது இரண்டாயிரம் ரூபாய் நோட்டில 'சிப்' வைச்சிருக்காமே அண்ணே உண்மையா"?
கவுண்டமணி:"அட நாற நாயே நீ முதல்ல உன் டி்ராயரில் 'சிப்' வைச்சு தச்சிப் போடுடா".



(58)
"எங்க சார் டேபிள் சேர் எல்லாம் எடுத்திட்டு போகறீங்க"?
"500,1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வர ஆட்களுக்கு பார்ம் எழுதிக் கொடுத்து ஏதோ 5,10 சம்பாதிக்கலாமே. ரிட்டயர்ட் ஆகி வூட்டுல சொம்மாதானே இருக்கே ன்னு வேலை வெட்டி இல்லாம பிரண்ட்ஸோட ஊர் சுத்தற பிள்ளை இப்படி டேபிள், சேர் கொடுத்து அனுப்பிட்டான்பா".




(59)
"அண்ணே நல்லா விசாரிச்சிட்டேன்.
சிப்ஸ் இருக்காம். ஹாட் சிப்ஸ் கடையில விதவிதமா ரூ. 500,2000க்கெல்லாம் வச்சிருக்காய்ங்களாம்"



(60)
"அண்ணே, கவலைப்படாதீங்கண்ணே.ஒரு நாளைக்கு ரூ. 4000 மாத்தலாமாம். ஆதார் இருக்கிற 10000 பேரை 10 நாளைக்கு வேலைக்கு வைச்சி நம்ம கிட்ட உள்ளதில 40 கோடிய காப்பாத்திடலாமண்ணே. சம்பளமா சும்மா ஒரு 4கோடி  தந்திடலாம்ணே".

2 comments:

  1. 60 is NOT a joke, but is going to be the ground reality. Already today there is a news that in Andhrapradesh, a political leader gives six months interest free loan to his villagers and disbursement will be in 500 & 1000s. After six months the borrower has to return it in 100s

    ReplyDelete
  2. I am not surprised. People must discourage such activities. But....

    ReplyDelete